கால ஸாஸ்திரம்

 பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன்  சாஸ்திரத்தில் வல்லவர். இவர் இயற்றிய இந்த சாஸ்திரம் தமிழில் இருக்கிறது. கால ஸாஸ்திரம்


கால அளவை கூறும் கால ஸாஸ்திரம்

தாமரை இதழ்களை எட்டு அடுக்கி ஒரு நுட்பமான ஊசிக்கொண்டு துவாரம் பண்ணுவதற்கு ஆகும் நேரமே ஒரு க்ஷணமாகும்.

02 க்ஷணம்கள்                01 இல்லம்

02 இல்லம்கள்                01 காஷ்டை

02 காஷ்டைகள்               01 நிமேஷம்

02 நிமேஷங்கள்              01 துடி (15 விதற்பரைகள்)

02 துடிகள்                     01 துரிதம் (30 விதற்பரைகள்)

02 துரிதம்கள்                 01 தற்பரை    (60 விதற்பரைகள் )

60 தற்பரைகள்                01 வினாழிகை

60 வினாழிகைகள்            01 நாழிகை

60 நாழிகைகள்                01 நாள்

07 நாட்கள்                     01 வாரம்

(ஞாயிறு,திங்கள்,செவ்வாய்,புதன்,வியாழன்,வெள்ளி,சனி இவையே ஏழு நாட்கள்)

பதினைந்து நாட்கள் ஒரு பக்ஷம்,

(ப்ரதமை,த்வீதியை,த்ரீதியை,சதுர்த்தி,பஞ்சமி,ஷஷ்டி,ஸப்தமி,அஷ்டமி,நவமி,

தசமி,ஏகாதசி,த்வாதசி,த்ரயோதசி,சதுர்தசி,பௌர்ணமி.இது சுக்லபக்ஷம்

ப்ரதமை,த்வீதியை,த்ரீதியை,சதுர்த்தி,பஞ்சமி,ஷஷ்டி,ஸப்தமி,அஷ்டமி,நவமி,

தசமி,ஏகாதசி,த்வாதசி,த்ரயோதசி,சதுர்தசி,அமாவாசை.இது க்ருஷ்ணபக்ஷம்.)

இரண்டு பக்ஷங்கள் ஒரு மாதம்

மாதங்கள் இரண்டுவகைப்படும்

01 சந்திரமானம்

02 ஸௌரமானம்

01 சைத்திரம்

02 வைசாகம்

03 ஜேஷ்டம்

04 ஆஷாடம்

05 ச்ராவணம்

06 பாத்ரபதம்

07 ஆஸ்வீயுஜம்

08 கார்திகம்

09 மார்கசிரம்

10 புஷ்யம்

11 மாகம்

12 பால்குனம்

என இப்பன்னிரெண்டும் சாந்திரமான மாதங்கள் இவை சூரிய சந்திர்கள் கூடி பிரிதல் மூலம் எற்படுவதாம்.

01 மேஷம் (சித்திரை)

02 ரிஷபம் (வைகாசி)

03 மிதுனம் (ஆனி)

04 கடகம் (ஆடி)

05 சிம்மம்(ஆவணி)

06 கன்னி (புரட்டாசி)

07 துலா (ஐப்பசி)

08 வ்ருச்சிகம் (கார்திகை)

09 தனுஸு (மார்கழி)

10 மகரம் (தை)

11 கும்பம் (மாசி)

12 மீனம் (பங்குனி)

என இப்பன்னிரெண்டு மாதங்கள் ஸௌரமான மாதங்களாகும்.இவை ஸூரியனுடைய ஓட்டத்தால் மட்டுமே ஏற்படுவதாகும்.

இரண்டு மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது,

01 வஸந்தம், (சித்தியரை,வைகாசி)

02 க்ரீஷ்மம்,(ஆனி,ஆடி)

03 வர்ஷம்,(ஆவணி புரட்டாசி)

04 சரத்,(ஐப்பசி,கார்த்திகை)

05 ஹேமந்தம்,(மார்கழி,தை)

06 சிசிரம்.(மாசி,பங்குனி)

என ருதுக்கள் ஆறு வகைப்படும். ருதுக்கள் மூன்று சேர்ந்த்து ஒரு அயணம்,

01 உத்ராயணம்,

02 தக்ஷிணாயம்

என அயணங்கள் இரண்டு வகைப்படும். இரண்டு அயணங்கள் சேர்ந்தது ஒரு வருஷம்.

இவ்வாறு பக்ஷங்கள்லும்,மாதங்களாலும்,ருதுக்களாலும்,அயணங்களாலும், உருவான வருடங்கள் மொத்தம் அறுபதாகும் (60) அவையாவன

01 ப்ரபவ,02 விபவ 03 சுக்ல 04 ப்ரமோதூத 05 ப்ரஜோத்பத்தி 06 ஆங்கீரஸ 07 ஸ்ரீமுக 08 பவ 09 யுவ 10 தாது 11 ஈஸ்வர 12 வெகுதான்ய

13 ப்ரமாதி 14 விக்ரம் 15 விஷூ 16 சித்திரபானு 17 ஸுபானு 18 தாரண 19 பார்திப 20 விய 21 ஸர்வஜித் 22 ஸர்வதாரி 23 விரோதி

24 விக்ருதி 25 கர 26 நந்தன 27 விஜய 28 ஜய 29 மன்மத 30 துன்முகி 31 ஹேவிளம்பி 32 விளம்பி 33 விகாரி 34 ஸார்வாரி 35 பிலவ

36 சுபக்ருது 37 சோபக்ருது 38 க்ரோதி 39 விசுவாவசு 40 பராபவ 41 பிலவங்க 42 கீலக 43 ஸௌம்ய 44 ஸாதாரண 45 விரோதிக்ருது

46 பரிதாபி 47 ப்ரமாதீச 48 ஆனந்த் 49 ராக்ஷஸ 50 நள 51 பிங்கள் 52 காளயுக்தி 53 ஸித்தார்தி 54 ரௌத்ரி 55 துன்மதி 56 துந்துபி

57 ருத்ரோத்காரி 58 ரக்தாக்ஷி 59 க்ரோதன 60 அக்ஷய. என்பனவையே  60 வருடங்களாகும்.

இவ் அறுபது வருடங்கள் ஒன்று முடிந்தால் ஒரு பரிவ்ருத்தியாகும்.

ஆறு பரிவ்ருத்திகள் சேர்ந்தால் ஒரு தேவவருடமாகும் அதாவது 360 மனித வருடங்களாகும்.

1200 தேவ வருடம் ஒரு கலியுகம் ( 432000 மனித வருடம்)

2400 தேவ வருடம் ஒரு த்வாபரயுகம் (864000 மனித வருடம்)

3600 தேவ வருடம் ஒரு த்ரேதாயுகம் (1296000 மனித வருடம்)

4800 தேவ வருடம் ஒரு க்ருதயுகம் (1728000 மனித வருடம்)

மேற்கூறப்பட்ட நான்கு யுகங்கள் ஒன்று சேர்ந்தது 12000 தேவயுகமாகும்.(4320000 மனித வருடமாகும்)இதை ஒரு சதுர்யுகம் அல்லது ஒரு மஹாயுகம் என்று கூறப்படுகிறது.

மாஹாயுகங்கள் எழுபத்துஒன்றும்(71)சற்று சந்தி வருடங்களும் சேர்ந்த்து ஒரு மன்வந்த்ரம் எனப்படும்.இது ஒரு மனுவினுடைய காலமாகும்.

மனுக்கள் மொத்தம் பதினான்கு(14)பேர்களாவார்.

01) ஸ்வயம்புவ மனு 02) ஸ்வாரோசிஷ மனு 03) உத்தம மனு 04) தாமஸ மனு 05) ரைவத மனு 06) ஸாக்ஷூஸ மனு 07) வைவஸ்வத மனு 08) ஸாவர்ணி மனு 09) தக்ஷஸாவர்ணி மனு 10) ப்ரம்மஸாவர்ணி 11) தர்மஸாவர்ணி 12) ருத்ரஸாவர்ணி 13) தேவஸாவர்ணி 14) இந்த்ரஸாவர்ணி

போன்றவைகளே பதினான்கு மனுக்களின் பெயர்களாகும்.

சந்தி வருடங்களுடன் கூடிய இம்மொத்த மனுக்களின் காலமும் ஒன்று சேர்ந்த்து ஒரு கல்பமாகும். ஒரு கல்பம் என்பது மொத்தம் (1000) ஆயிரம் மஹாயுகங்களாகும்.

ஒரு கல்பம் என்பது ப்ரம்மாவிற்கு அரை நாளாகும்.இரண்டு கல்பம் சேர்ந்த்து ப்ரம்மாவிற்கு ஒரு நாளாகும்.பகலில் ப்ரம்மாவிழித்திருந்து இரவில் உறங்குவார்.ப்ரம்மாவின் பகல் பொழுதிலேயே ஸ்ருட்டிகள் நடக்கும் இரவில் ப்ரபஞ்சத்தை ஒடுக்கிக்கொண்டு தூங்குவார்.

ப்ரம்மாவின் மாதத்தில் முப்பது(30) பகல் பொழுதும் முப்பது (30) இரவு பொழுதும் அடங்கும்,

01) வாமதேவ கல்பம் 02) ஸ்வேதவராஹ கல்பம் 03) நீல லோஹித கல்பம் 04) ரந்தர கல்பம் 05) ரௌரவ கல்பம் 06) தேவ கல்பம் 07) ப்ருகத் க்ருஷ்ண கல்பம் 08) கந்தர்ப கல்பம் 09) ஸத்ய கல்பம் 10) ஈசான கல்பம் 11) தம கல்பம் 12) ஸாரஸ்வத கல்பம் 13) உதான கல்பம் 14) காருட கல்பம் 15) கௌரம கல்பம் 16) நாரஸிம்ம கல்பம் 17) சமான கல்பம் 18) ஆக்னேய கல்பம் 19) ஸோம கல்பம் 20) மானவ கல்பம் 21) தத்புருஷ கல்பம் 22) வைகுண்ட கல்பம் 23) லக்ஷ்மி கல்பம் 24) ஸாவித்ரீ கல்பம் 25) கோர கல்பம் 26) வராஹ கல்பம் 27) வைராஜ கல்பம் 28) கௌரீ கல்பம் 29) மஹேஸ்வர கல்பம் 30) பித்ரு,என ஸ்ருஷ்டிகள் நடக்கும் ப்ரம்மாவின் பகல் பொழுதின் பெயர்களாகும்.இரவு காலத்தில் ப்ரம்மா உறங்குவதால் அந்தந்த கல்பத்தின் இரவாகவே கொள்ளப்படும்.

அறுபது கல்பம்(60) சேர்ந்த்து ப்ரம்மாவிற்கு ஒரு மாதமாகும்,எழு நூற்று இருபது (720) கல்பம் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு வருடமாகும், இந்த கணக்கின் படி ப்ரம்மா (100) ஆண்டு காலம் வாழ்வார்,பிரம்மாவின் பூர்ண ஆயுள் எழுபத்திரெண்டாயிரம் (72000) கல்பகாலமாகும்.

இனி பிரம்மாவின் ஸ்ருஷ்டி முதல் சென்ற நாட்களை எவ்வாறு கணக்கிட வேண்டும் என்பதை கூறப்போகிறேன் கவணமாக கேட்கவும்.

வாமதேவ கல்பம் முடிவடைந்து ஸ்வேதவராஹ கல்பத்தில் இதுவரை ஆறு மனுக்களின் காலமும் அவர்களின் சந்திவருடங்களும் முடிவடைந்து தற்சமயம் ஏழாவது மனுவான வைவஸ்வதமனுவின் காலத்தில் இருபத்துஏழு சதுர்யுகங்கள் முடிந்து இருபத்து எட்டாவது சதுர்யுகத்தில் நான்காவது யுகமான கலியுகம் நடந்துக்கொண்டிருக்கிறது.

2022 வருட கணக்கின் படி கலியுகம் 5123 வருடம் முடிந்து விட்டது. இந்த சுபக்ருத் வருடத்துடன் கலியுகம் 5124-ம் வருடம் பிறந்து விட்டது.... இது சகாதேவன் சாஸ்திரத்தில்  இருக்கிறது.

🙏


💥🔥🔥🔥🔥🔥🔥🔥💥

Comments

Popular posts from this blog

Tamil units of measurement

Indian Laws in Tamil

தமிழ் விடுகதை விளையாட்டு 400