Posts

Showing posts from January, 2020

நமது முன்னோர்கள் "தன்னிகரற்ற" மாபெரும் அறிவாளிகள்

Image
சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான்.. தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர் !! பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரம் இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத் தெரியாத உண்மைகள். சித்திரை 1 ஆடி 1 ஐப்பசி 1 தை 1 இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம். நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...? "சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று  சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம். என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும். வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.... ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!! பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி