தமிழ் நாடுதான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.

#பணக்கார நாடு.

சோழர் காலத்தில் தமிழ் நாடுதான் #உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.

#சுமார்40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் #தஞ்சை பெரிய கோவிலும், #கங்கை கொண்ட சோழபுரம்தான்.

அப்போது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன் பிடிக்கும் கிராமமாக 1066 ல் நிறுவப்பட்டது.

தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் #தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் #மாலிக்கபூரின் முஸ்லிம் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, #500யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.

இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?

எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான்.
ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.

உலகிலேயே ஒரே சீராக #80இலட்சம் ஏக்கர் விளை நிலம் #காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது. எங்கும் #மூன்று போகச் சாகுபடிக்குக் #காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.

வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன் படுத்தினர்.

மலேயா காடுகளிலிருந்தும், மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.
பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன.

#அசுவசாஸ்திரம் என்ற குதிரைப் பராமரிப்பு நூல் எழுதப்பட்டது. முதன் முதலில் குதிரைகளுக்கு #லாடம் அடிக்கும் முறையைக் கண்டு பிடித்தவர்கள் #தமிழர்களே!

ஏழுமலையானும் சோழர்களும்
என்ற நூலில் இருந்து...

Comments

Popular posts from this blog

Tamil units of measurement

Indian Laws in Tamil

தமிழ் விடுகதை விளையாட்டு 400