Posts

உழவுக்கும் வீட்டுக்கும்

  முப்பது வருடங்களுக்கு முன்பு வரை கூட இருந்த முறைகள் ஒன்று கூட இப்போது இருக்கும் உழவர்களிடம் இல்லை... வீட்டுக் கூரையில் : 1. சுரை வீட்டை சுற்றிலும் : 1. கொடி அவரை 2. பீர்க்கன் 3. புடலை 4. மஞ்சள் பூசணி 5. கீரைகள் 6. காய்கறிகள் கால்நடைகள் : 1. நெய் மற்றும் மோருக்காக - பசுக்கள் (குறைந்தது ஒன்று கறவையில்), 2. உழவுக்கும் வண்டிக்கு கமலை ஏற்றத்திற்கும் என - பல ஜோடி காளை மாடுகள் , 3. முட்டைக்கும் இறைச்சிக்கு என கோழிகள் ஆடுகள் . வயக்காட்டில் : 1. சோளம் 2. கம்பு 3. ராகி 4. சிகப்பு நெல் 5. தக்காளி, 6. அவரை 7. மிளகாய், 8. கத்திரி 9. எள், 10.கடலை 11. வெண்டை வரப்பில் : 1. அகத்தி 2. ஆமணக்கு 3. துவரை ஊடுபயிர் : 1. பச்சைப்பயறு 2. உளுந்து 3. தட்டை 4. கொண்டைக்கடலை 6. கொத்தமல்லி உயிர் வேலியில் : 1. பிரண்டை 2. கோவை 3. நுரை பீர்க்கன் 4. சுண்டை 5. மூலிகை செடிகள் கொடிகள் உரக்குழி : கால்நடை சாணத்தை எடுத்து ஒரு குழியில் போட்டு மக்குவதற்க்கு மாட்டு கோமியத்தை அதில் ஊற்றுவார்கள். தினமும் இந்த சாணம் அள்ளுவது ஒரு வேலையாக காலையிலும் மாலையிலும் செய்ய வேண்டியது இருக்கும். இது நன்றாக மக்கி நல்ல அடி உரமாக இருக்கும்....

கால ஸாஸ்திரம்

 பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன்  சாஸ்திரத்தில் வல்லவர். இவர் இயற்றிய இந்த சாஸ்திரம் தமிழில் இருக்கிறது. கால ஸாஸ்திரம் கால அளவை கூறும் கால ஸாஸ்திரம் தாமரை இதழ்களை எட்டு அடுக்கி ஒரு நுட்பமான ஊசிக்கொண்டு துவாரம் பண்ணுவதற்கு ஆகும் நேரமே ஒரு க்ஷணமாகும். 02 க்ஷணம்கள்                01 இல்லம் 02 இல்லம்கள்                01 காஷ்டை 02 காஷ்டைகள்               01 நிமேஷம் 02 நிமேஷங்கள்              01 துடி (15 விதற்பரைகள்) 02 துடிகள்                     01 துரிதம் (30 விதற்பரைகள்) 02 துரிதம்கள்                 01 தற்பரை    (60 விதற்பரைகள் ) 60 தற்பரைகள்                01 வினாழிகை 60 வினாழிகைகள்            01 நாழிகை 60 நாழிகைகள்        ...

Indian Laws in Tamil

 1, ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4) 2, நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை. IPC-217 3, நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம். CRPC 404 4, அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166 5, எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.  6, சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம். Article 19(1) , CRPC 303,302(2) 7, வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312. 8, இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ் எவர் ஒருவரும் பார்வையிடலாம். 9, இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43 10, ஒரு குற்றம் நட...

Tamil words

 பண்டாரம் என்ற சொல்லுக்கு முதற்பொருள் 'பொன், வெள்ளி, முத்து போன்ற உயர்மதிப்பு உடைய பொருள்களைச் சேர்த்து வைக்கும் கருவூலம்' என்பதாகும். இப்பண்டாரங்களின் வாசலில் நின்று காவல்பணி செய்து வந்தவர்களே இக்காலத்தில் 'பண்டாரம்' என்னும் சைவ மதம் சார்ந்த சாதியராவர். -தொ.ப சமூகம் என்ற ஒன்று தான் உருவாக்கும் அல்லது தன் மீது கவியும் ஒரு கருத்தியலையே விளையாட்டுக்களின் வழியே வெளிப்டுத்துகின்றது. -தொப துறவிக்கு செவ்வாடை என்பது பௌத்த மதம் தந்ததாகும்.  பௌத்த மதம் தந்த மற்றொரு வழக்கம் தலையினை மொட்டையடித்துக் கொள்வது. பௌத்த மதத்தின் துறவிகள் கையில் வைத்திருக்கக்கூடிய எட்டுப் பொருள்களில் தலைமழிக்கும் கத்தியும் ஒன்று. -தொ.ப தமிழர்கள் இன்று பரவலாக ஏற்றுக்கொண்டிருக்கும் 'பட்டிமண்டபம்' என்ற கலைவடிவம் பௌத்த மதத்திலிருந்து பிறந்தது. பிற மதவாதிகளோடு வாதம் நடத்தி வென்று தங்கள் மதத்தைப் பரப்புவது பௌத்தத் துறவிகளின் வழக்கம். -தொ.ப இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அரசியல் உலகில் சூறாவளியாகக் 'கடமை,  கண்ணியம், கட்டுப்பாடு' ஆகிய சொற்கள் உருவெடுத்தன. இவை புத்தம், தர்மம், சங்கம் ஆகிய பௌத...

தமிழ் விடுகதை விளையாட்டு 400

*விடுகதை விளையாட்டு* *விடை கண்டுபிடியுங்ன 👇👇👇👇👇👇👇👇👇👇👇 1. அள்ள முடியும்; ஆனால் கிள்ள முடியாது - அது என்ன? 2. அள்ளவும் முடியாது; கிள்ளவும் முடியாது - அது என்ன? 3. ஏழை படுக்கும் பாய்; எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை? 4. பொழுது சாய்ந்தால் பூந்தோட்டம்;     விடிந்து பார்த்தால் வெறுந் தோட்டம். 5. தாளைக் கொடுத்தால் தின்னும்;     தண்ணிர் குடித்தால் மடியும். 6. சின்ன மச்சான் - என்னைக்     குனிய வச்சான். 7. பக்கத்திலுள்ள பட்டணத்தைப்     பார்க்க முடியவில்லை. 8. நூல் நூற்கும்; இராட்டை அல்ல,     ஆடை நெய்யும், தறியும் அல்ல. 9. சூடுபட்டுச் சிவந்தவன்,     வீடுகட்ட உதவுவான். 10. பட்டையைப் பட்டையை நீக்கி,       பதினாறு பட்டையை நீக்கி,       முத்துப் பட்டையை நீக்கி,       முன்னே வாராள் சீமாட்டி. 11. நித்தம் கொட்டும்; சத்தம் இல்லை. 12. மண்ணுக்குள்ளே இருக்கும் மாயாண்டி,       உரிக்க உரிக்கத் தோலாண்டி. 13. எண்ணும் முள்ளும் இல்லாத கடிகாரம்; ...

தமிழ் நாடுதான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.

Image
#பணக்கார நாடு. சோழர் காலத்தில் தமிழ் நாடுதான் #உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு. #சுமார்40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் #தஞ்சை பெரிய கோவிலும், #கங்கை கொண்ட சோழபுரம்தான். அப்போது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன் பிடிக்கும் கிராமமாக 1066 ல் நிறுவப்பட்டது. தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் #தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் #மாலிக்கபூரின் முஸ்லிம் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, #500யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது. இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது? எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது. உலகிலேயே ஒரே சீராக #80இலட்சம் ஏக்கர் விளை நிலம் #காவிரிப் படுகைப் பகுதியில்த...

நமது முன்னோர்கள் "தன்னிகரற்ற" மாபெரும் அறிவாளிகள்

Image
சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான்.. தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர் !! பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரம் இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத் தெரியாத உண்மைகள். சித்திரை 1 ஆடி 1 ஐப்பசி 1 தை 1 இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம். நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...? "சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று  சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம். என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும். வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.... ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!! பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி ...